மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: இன்ஸ்டன்ட் தேங்காய் லட்டு!

ரிலாக்ஸ் டைம்: இன்ஸ்டன்ட் தேங்காய் லட்டு!

ரிலாக்ஸ் டைமில் சாப்பிட ஏதாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பவர்கள் பலர். அப்படிப்பட்டவர்கள் எளிதாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய இந்த சத்தான லட்டு செய்து சுவைக்கலாம்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கொப்பரை தேங்காய்த் துருவல், ஒரு கப் பால் பவுடர், முக்கால் பொடித்த சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் சிறிது சிறிதாக பால் சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, பாதாம் அல்லது முந்திரி வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு: தேங்காய்த் துருவலுக்கு பதில் கடைகளில் கிடைக்கும் டெஸிகேடட் கோகனட் தூளும் பயன்படுத்தலாம்.

சிறப்பு

உடனடி புத்துணர்ச்சி தரும் இந்த லட்டு, அனைவருக்கும் ஏற்றது. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு சிறந்தது.

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

திங்கள் 6 செப் 2021