மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: பனீர் கொழுக்கட்டை!

கிச்சன் கீர்த்தனா: பனீர் கொழுக்கட்டை!

பண்டிகைகளும் அவற்றுக்குச் செய்கிற பலகாரங்களும் பாரம்பரியத்தைப் பறைசாற்றுபவை மட்டுமல்ல... நம் வாழ்வியல் ஆரோக்கியத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. வரும் விநாயகர் சதுர்த்திக்குச் செய்யப்படுகிற இந்த சத்தான பனீர் கொழுக்கட்டையும் அப்படிப்பட்டதுதான்.

என்ன தேவை?

மேல் மாவுக்கு

அரிசி மாவு - ஒரு கப்

தண்ணீர் - முக்கால் கப்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - அரை டீஸ்பூன்

ஃபில்லிங் செய்வதற்கு

துருவிய பனீர் - ஒரு கப்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்

தனியா (மல்லி) தூள் - ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி, அதில் உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொதிக்க விடவும். கொதித்தவுடன் அரிசி மாவை சிறிது சிறிதாகத் தூவி, மாவு வேகும் வரை நன்றாகக் கிளறவும். அடுப்பை அணைத்து மாவை சிறிது நேரம் மூடி வைக்கவும். பிறகு, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாகப் பிசையவும்.

பனீருடன் பச்சை மிளகாய், மல்லித்தழை, தனியாதூள், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மேல் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி ஒரு கிண்ணம் போல் செய்துகொள்ளவும். நடுவில், சிறிதளவு ஃபில்லிங் வைத்து அதை மூடி, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

நேற்றைய சண்டே ஸ்பெஷல் - ஓட்ஸ், பிரெட், கார்ன் ஃப்ளேக்ஸ்... ஆரோக்கியமான உணவுகளா?

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

திங்கள் 6 செப் 2021