மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 5 செப் 2021

விநாயகர் சிலை வைத்தால் நடவடிக்கை: சங்கர் ஜிவால்

விநாயகர் சிலை வைத்தால் நடவடிக்கை: சங்கர் ஜிவால்

சென்னையில் விநாயகர் சதுர்த்தி அன்று அரசின் அறிவிப்பை மீறுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

வருகிற 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலைகளை வைக்கவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை.

ஆனால், தனிநபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி உண்டு என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு பாஜக மற்றும் இந்து அமைப்பு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது.

இதுகுறித்து சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படிதான் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று நேற்று (செப்டம்பர் 4) இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்தார்.

இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையர் சங்கர் ஜிவால், “கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையைக் கொண்டாடுவதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளை அந்தந்த காவல் நிலையங்களுக்கு அழைத்து பேச்சுவார்த்தை மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தி அன்று போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். சென்னையில் விநாயகர் சதுர்த்தி அன்று தடையை மீறி விநாயகர் சிலையை பொது இடத்தில் வைத்து வழிபட்டாலோ அல்லது ஊர்வலமாக எடுத்துச் சென்றாலோ சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுதொடர்பாக கடந்தாண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைப்பது தவறு. அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தனிநபர்கள் விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபடலாம்” என்று கூறியுள்ளார்.

-வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

ஞாயிறு 5 செப் 2021