மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 5 செப் 2021

இந்திய பயணிகள்: தடையை நீக்கிய பிலிப்பைன்ஸ்!

இந்திய பயணிகள்: தடையை நீக்கிய பிலிப்பைன்ஸ்!

இந்தியா உள்ளிட்ட 10 நாடுகள் மீதான பயண தடையை நீக்கி, பயணிகளை நாளை (செப்டம்பர் 6) முதல் அனுமதிக்க பிலிப்பைன்ஸ் அரசு முடிவு செய்துள்ளது

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியதால், இந்தியாவுடனான விமானப் போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்தன. தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தன.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் காரணமாக இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ் அரசு தடை விதித்திருந்தது. சூழலுக்கேற்ப இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட 10 நாடுகள் மீதான பயண தடையை நீக்கி, பயணிகளை நாளை (6ஆம் தேதி) முதல் அனுமதிக்க பிலிப்பைன்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே வழங்கியுள்ளார்.

பிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,310 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், பயண தடையை நீக்க அரசு முடிவு செய்திருக்கிறது. எனினும், இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து வரும் பயணிகள், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஞாயிறு 5 செப் 2021