மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 5 செப் 2021

நிபா: தமிழக கேரள எல்லையோர மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பு!

நிபா: தமிழக கேரள எல்லையோர மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பு!

கொரோனா வைரஸை தொடர்ந்து தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவை நிபா வைரஸ் துரத்தி வருகிறது.

கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் கடந்த 1ஆம் தேதி மூளை அழற்சி மற்றும் மாரடைப்பு அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அச்சிறுவனுக்கு காய்ச்சல் அதிக அளவு இருந்ததன் காரணமாக சிறுவனின் உடலில் இருந்து ரத்த மாதிரிகள் மற்றும் எச்சில் உள்ளிட்டவை எடுக்கப்பட்டு புனே வைரலாஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் அந்த சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதியானது. சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும், அது பலனில்லாமல் இன்று காலை உயிரிழந்தார்.

இந்நிலையில் அந்த சிறுவனுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டும், தேடப்பட்டும் வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த சிறுவன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து மூன்று மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதால், நிபா வைரஸ் தொடர்பை கண்டறியும் முயற்சி சவாலானது என்றும் கூறியுள்ளது.

இதில் 188 பேர் சிறுவனுடன் தொடர்பில் இருந்ததாகவும், அதில் 20 பேர் அதிக ஆபத்து உள்ள முதன்மை தொடர்பை கொண்டிருந்ததாகவும் கேரள சுகாதார துறை கூறியுள்ளது.

இந்த நிலையில் கேரளாவுக்கு நோய் கட்டுப்பாட்டு தேசிய குழுவை ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது.

இந்த சூழலில் தமிழக கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “கேரளாவில் ஜிகா வைரஸ் தாக்கம் ஏற்படும் போதே எல்லையில் காய்ச்சல் முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழக கேரள எல்லையோர 9 மாவட்டங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு

அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து தமிழகம் வருவோருக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிய வைரஸ்கள் வரும்போது அதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு நம்மிடம் சிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகம் நிச்சயமாக பாதுகாப்பான நிலையில் உள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தடுப்பூசிக்கு கட்டுப்படாத சி.1.2 வகை கொரோனா ஒன்பது நாடுகளில் பரவியுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் மீதான பாதிப்பு 6 முதல் 10 சதவிகிதமாக உயர்ந்தாலும் குழந்தைகள் இறப்பு தமிழகத்தில் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு குறித்து கண்காணித்து வருகிறோம். ஏற்கனவே கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்ட போது அதை அந்த மாநில அரசு சிறப்பாக கட்டுப்படுத்தியது. கேரளாவில் பரவியுள்ள நிபா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்று கூறினார்.

-பிரியா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ஞாயிறு 5 செப் 2021