மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 5 செப் 2021

இண்டர்வியூவுக்கு வந்த இளைஞர்கள்: விபத்தில் பலி!

இண்டர்வியூவுக்கு வந்த இளைஞர்கள்: விபத்தில் பலி!

பெருங்களத்தூர் அருகே நடந்த கோர விபத்தில் 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சென்னை துரைப்பாக்கம் அருகே உள்ள இந்துஸ்தான் பல்கலைக் கழகத்தில் இந்த ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர்கள் மேட்டூரை சேர்ந்த நவீன், ராஜஹாரீஸ், திருச்சியைச் சேர்ந்த அஜய், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராகுல், சென்னையைச் சேர்ந்த அரவிந்த் சங்கர்.

இவர்கள் நாளை நடைபெறும் இண்டர்வியூ ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்னை வந்தனர். நேற்று நண்பர்களுடன் தி.நகருக்குச் சென்று சில பொருட்களை வாங்கிவிட்டுத் திரும்பினர். அப்போது, வண்டலூர் வரை காரில் ஒரு ரவுண்டு சென்றுவரலாம் என அங்கிருந்து புறப்பட்டனர்.

காரை மேட்டூரைச் சேர்ந்த நவீன் ஓட்டிச் சென்றார். நேரம் இரவு 12 மணிக்கு மேல் கடந்துவிட்டது. அப்போது பெருங்களத்தூர் தனியார் ஐடி நிறுவனத்தின் அருகே சென்று கொண்டிருக்கும் போது வாகனம் ஒன்று இவர்கள் சென்ற கார் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி 5 பேர் சென்ற கார், அங்கு இரும்புக் கம்பிகள் ஏற்றி வைத்திருந்த லாரியின் அடியில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் இருந்த 5 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குரோம்பேட்டை போலீசார், இரண்டு மணி நேரம் போராடி 5 உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-பிரியா

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

ஞாயிறு 5 செப் 2021