மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 5 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: மதுர் தட்டை!

ரிலாக்ஸ் டைம்: மதுர் தட்டை!

வாரத்தில் ஒருநாள் கொஞ்சம் மெனக்கெட்டு எளிமையான ஸ்நாக்ஸ் வகைகளை வீட்டிலேயே செய்து வைத்துக் கொண்டால் ரிலாக்ஸ் டைமில் கொறிக்கலாம். அதற்குத்தான் இந்த ரெசிப்பி

எப்படிச் செய்வது?

ஒரு கப் வறுத்த ரவை, ஒரு கப் வறுத்த மைதா, ஒரு கப் அரிசி மாவு,

ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், ஒரு டீஸ்பூன் சீரகம், தேவையான அளவு

உப்பு... இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் கலக்கவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். சிறிய நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து, சின்ன தட்டையாகத் தட்டவும். மீதமிருக்கும் மாவு முழுவதையும் தட்டை வடிவத்துக்குத் தட்டி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், தட்டைகளைச் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சில்லி சாஸுடன் பரிமாறவும்.

சிறப்பு

மெல்லியதாகத் தட்டினால் நன்றாக, கரகரப்பாக இருக்கும். ஒரு மாதம் வரை கெடாது. அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 5 செப் 2021