மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

வெளிநாட்டினரின் விசா 30ஆம் தேதிவரை நீட்டிப்பு!

வெளிநாட்டினரின் விசா 30ஆம் தேதிவரை நீட்டிப்பு!

சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் இந்தியாவில் உள்ள வெளிநாட்டினருக்கு செப்டம்பர் 30ஆம் தேதிவரை விசா நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு பல்வேறு வகை விசாக்களில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினர், சர்வதேச விமான சேவை ரத்தானதால் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் உள்ளனர். அவர்களுக்கு அபராதம் எதுவும் விதிக்காமல், அவர்களது விசா காலத்தை இலவசமாக ஒன்றிய அரசு நீட்டித்து வருகிறது.

அந்த வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் விசா நீட்டிப்பு காலம் முடிந்த நிலையில், விசாவை இந்த மாதம் (செப்டம்பர்) 30ஆம் தேதிவரை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது. அதனால், அத்தகைய வெளிநாட்டினர் விசா நீட்டிப்புக்காக விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று ஒன்றிய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை, செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகும் விசாவை நீட்டிக்க விரும்புபவர்கள், அதற்காக ஆன்லைனில் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால், தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் திருச்சியிலிருந்து மீண்டும் இலங்கைக்கு விமான சேவையை தொடங்கி உள்ளது. வாரத்தில் வியாழக்கிழமை மட்டும் இந்த விமானம் இயக்கப்படுகிறது.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

சனி 4 செப் 2021