மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

இந்தியாவுக்கான நான்காவது தங்கத்தை வென்ற பிரமோத்

இந்தியாவுக்கான நான்காவது தங்கத்தை வென்ற பிரமோத்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கான நான்காவது தங்கப் பதக்கத்தை இந்திய வீரர் பிரமோத் பகத் வென்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளையுடன் பாரா ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் விளையாட்டின் நுணுக்கங்களை நன்கறிந்து திறமையாக விளையாடி பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

இன்று(செப்டம்பர் 4) ஆடவருக்கான பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. ஆடவர் பேட்மிண்டன் போட்டியின் எஸ்.எல் 3 பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிரமோத் பகத், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த டேனியல் பெத்தேலை எதிர்த்து விளையாடினார். இதில் பிரமோத் பகத் 21-14, 21-17 என்ற கணக்கில் டேனியல் பெத்தெலை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார்.

அதுபோன்று பேட்மிண்டன் எஸ்.எல்.3 பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் மனோஜ் சர்க்கர், 22-20, 21-13 என்ற கணக்கில் ஜப்பான் வீரர் புஜிஹராவை வென்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இந்த பாரா ஒலிம்பிக்கில்தான் பேட்மிண்டன் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. முதல் ஆண்டிலேயே இந்தியாவிற்கு தங்கம் பெற்றுக் கொடுத்த வீரர் பிரமோத் பகத்துக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதன்படி, பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் பிரமோத் பகத்.

பாரா ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்றுள்ளது.

பேட்மிண்டன் போட்டியில் ஒரேநாளில் தங்கம் வென்ற பிரமோத் பகத்துக்கும், வெண்கலம் வென்ற மனோஜ் சர்க்கருக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

சனி 4 செப் 2021