மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு முந்திரி பக்கோடா

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு முந்திரி பக்கோடா

நமது அன்றாட உணவாக இருந்த சிறுதானியங்களில் முக்கியமானது கேழ்வரகு (ராகி). முன்பெல்லாம் கேப்பைக் களி கிண்டாத வீட்டையோ, கேப்பைக் கூழ் இல்லாத அம்மன் கோவில் திருவிழாக்களையோ பார்ப்பது அரிதான ஒன்று. இப்படி உணவாக மட்டுமல்லாமல், நமது கலாச்சாரத்தோடும் நீண்டகாலத் தொடர்புடையது கேழ்வரகு. இப்போது எத்தனை பேர் கேழ்வரகை விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படிப்பட்டவர்கள் இந்த கேழ்வரகு முந்திரி பக்கோடா செய்து ருசிக்கலாம்.

எப்படிச் செய்வது?

முதலில் அரை டேபிள்ஸ்பூன் வனஸ்பதியை உருக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 200 கிராம் ராகி (கேழ்வரகு) மாவு, 50 கிராம் கடலை மாவு, 50 கிராம் அரிசி மாவு, இரண்டாக உடைத்த முந்திரி பத்து, இரண்டு சிட்டிகை சீரகத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயம் இரண்டு, பொடியாக நறுக்கிய சிறிதளவு கொத்தமல்லித்தழை, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு சிட்டிகை சமையல் சோடா, தேவைக்கேற்ப மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு, உருக்கிய வனஸ்பதி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பிறகு சிறிதளவு தண்ணீர்விட்டு மாவைக் கெட்டியாகப் பிசிறி வைக்கவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி பிசிறிவைத்துள்ள மாவைப் பக்கோடாக்களாகக் கிள்ளிப் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு

வனஸ்பதியைத் தவிர்க்க நினைப்பவர்கள் வெண்ணெய் சேர்க்கலாம். அதேபோல இந்தக் கலவையில் அரைக்கீரை சேர்த்தும் பக்கோடா செய்யலாம்.

சிறப்பு

அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்துகொண்டது. உடலின் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக, இதில் உள்ள லெசித்தின் (Lecithin), மெத்தியோனின் ( Methionine) போன்ற அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மைகொண்டவை.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

சனி 4 செப் 2021