மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: நூடுல்ஸ் பாம்!

கிச்சன் கீர்த்தனா: நூடுல்ஸ் பாம்!

பெண்களின் நிலையை மனதில் வைத்து புரதச்சத்து அதிகம் கொண்ட, சமைப்பதற்கும் ஜீரணமாவதற்கும் எளிதான ரெடிமேட் உணவுப் பொருளே நூடுல்ஸ். இன்றைக்கு இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சந்தை வெகுவேகமாக விரிவடைந்து வரும் நாடு இந்தியா. இந்த நூடுல்ஸ் கொண்டு பலவிதமான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று இந்த நூடுல்ஸ் பாம்.

என்ன தேவை?

நூடுல்ஸ் பாக்கெட் - ஒன்று

வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 (மசிக்கவும்)

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கைப்பிடி அளவு

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

நூடுல்ஸ் பாக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி நூடுல்ஸை வேகவைக்கவும். அகலமான பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கி தனியே வைக்கவும். வேகவைத்த நூடுல்ஸ் உடன் சோள மாவு சேர்த்து, நூடுல்ஸ் உடைந்துவிடாமல் கவனமாகப் பிசிறவும். உருளைக்கிழங்கு கலவை உருண்டைகளின் மீது நூடுல்ஸைச் சுற்றவும். பிறகு லேசாக அழுத்தவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: நூடுல்ஸ் பர்கர்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

சனி 4 செப் 2021