மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

எஸ்.ஐ மரணம்: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய 5,598 காவலர்கள்!

எஸ்.ஐ மரணம்: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய 5,598 காவலர்கள்!

மரணமடைந்த எஸ்.ஐ குடும்பத்துக்கு ரூ.27 லட்சம் நிதி திரட்டி அவருடைய குழந்தைகள் பெயரில் எல்ஐசியில் முதலீடு செய்த 5,598 காவலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள காமக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். வயது 41. இவர், 2003ஆம் ஆண்டில் காவலர் பணியில் சேர்ந்து 2008இல் சப் இன்ஸ்பெக்டராகப் பணி உயர்வுப் பெற்றார். தொடர்ந்து, வேலூர் சரகத்துக்குட்பட்ட காவல் நிலையங்களில் 12 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். கடைசியாக, சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த மே 8ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் எஸ்.ஐ செல்வராஜ் மரணமடைந்தார். செல்வராஜின் மனைவி கோமதியும் வேலூரில் பெண் காவலராக உள்ளார். இவர்களுக்கு 9, 7, 6 ஆகிய வயதுகளில் மூன்று பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், செல்வராஜின் குடும்பத்துக்கு உதவிட அதே 2003ஆம் ஆண்டில் இவருடன் பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதும் உள்ள காவலர்கள் 5,598 பேர் முன்வந்தனர். இவர்கள் டெலிகிராம் செயலி மூலம் ஒன்றிணைந்து தலா 500 ரூபாய் வீதம் மொத்தம் ரூ.27,99,000 நிதி திரட்டினர். இந்தத் தொகையில் செல்வராஜின் மூன்று பெண் பிள்ளைகள் மீதும் தலா 9,32,000 ரூபாயை எல்ஐசி காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்து அதற்கான ஆவணங்களையும் அவரின் மனைவி கோமதியிடம் வழங்கினர்.

பாலிசி எடுத்ததன் மூலம் கிடைக்கப்பெற்ற முகவர் தரகுத் தொகை 54,055 ரூபாயையும் அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. இந்த உன்னத சேவை காவல் துறையினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

-ராஜ்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 3 செப் 2021