மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

ரூ.1.12 லட்சம் கோடியைத் தாண்டிய ஜிஎஸ்டி வசூல்!

ரூ.1.12 லட்சம் கோடியைத் தாண்டிய ஜிஎஸ்டி வசூல்!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1 லட்சத்து 12 ,020 கோடி வசூலாகி இருக்கிறது. ஜிஎஸ்டி வசூல், தொடர்ந்து ஒன்பது மாதங்களாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிடைத்து வருகிறது. அதில் மத்திய சரக்கு-சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.20,522 கோடியும், மாநில சரக்கு-சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.26,605 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.56,247 கோடியும் வசூலாகியுள்ளது. செஸ் வரியாக ரூ.8,646 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ஆனால், கடந்த ஜூன் மாதம் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் சென்றது. இருப்பினும், ஜூலை மாதத்தில் மீண்டும் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. தற்போது, தொடர்ந்து இரண்டாவது மாதமாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்துடன் (ரூ.86,449 கோடி) ஒப்பிடுகையில், இது 30 சதவிகிதம் அதிகம். இருப்பினும், கடந்த ஜூலை மாதத்துடன் (ரூ.1 லட்சத்து 16,000 கோடி) ஒப்பிடுகையில், இது குறைவாகும்.

‘‘பொருளாதார வளர்ச்சி, வரி ஏய்ப்புக்கு எதிரான நடவடிக்கை, போலி ரசீதுகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றால் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது. இனிவரும் மாதங்களிலும் அதிகமான வசூல் கிடைக்கும்’’ என்று மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.

-ராஜ்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 3 செப் 2021