மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

மேலும் இரண்டு ஆசிரியைகள், இரண்டு மாணவிகளுக்கு கொரோனா!

மேலும் இரண்டு ஆசிரியைகள், இரண்டு மாணவிகளுக்கு கொரோனா!

தமிழ்நாட்டில் மேலும் இரண்டு மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வருவதையடுத்து, தமிழ்நாட்டில் 9முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முன்னதாக தமிழ்நாடு அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து கொடுத்திருந்தது.

பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்டந்தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றும், இன்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, கடலூரில் ஆசிரியை ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று காலை நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், அரியலூரில் உள்ள நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு தொற்று உறுதியானதை அடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதுபோன்று அதேமாவட்டத்தில் வரதராஜன்பேட்டையிலுள்ள புனித லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மேற்கண்ட பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒரே நாளில் மூன்று மாணவிகள், இரண்டு ஆசிரியைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு சென்று வந்தாலும் ஓரிரு மாணவர்களுக்கு தொற்று ஏற்படும்போது அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதால், மீண்டும் பள்ளிகளை மூட அரசுக்கு நிர்பந்தம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

-வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 3 செப் 2021