மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

பயிற்சி மருத்துவர்களுக்கு கூடுதல் பணிநேரம் ஒதுக்கப்படுகிறதா?

பயிற்சி மருத்துவர்களுக்கு கூடுதல் பணிநேரம் ஒதுக்கப்படுகிறதா?

அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களுக்கு கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, மருத்துவ கல்வி இயக்குநருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், மேற்படிப்பு மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும் 8 மணி நேரத்துக்கு மேல் பணியாற்ற நிர்பந்திக்கப்படுகின்றனர். அதனால் ஏற்படுகிற பணிச்சுமை காரணமாக பயிற்சி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், பயிற்சி மருத்துவர்களுக்கு 8 மணி நேர பணியை நிர்ணயித்து 2015ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று(செப்டம்பர் 3) தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பின் கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்படுவதாக எந்த புகாரும் இல்லை எனவும், கூடுதல் பணி நேரம் ஒதுக்கியது குறித்து புகார் அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் மேற்படிப்பு மாணவர்களுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

-வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 3 செப் 2021