மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

மதுரை ஆட்சியரின் கார் ஜப்தி!

மதுரை ஆட்சியரின் கார் ஜப்தி!

வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவின்படி மதுரை மாவட்ட ஆட்சியரின் கார் ஜப்தி செய்யப்பட்டது.

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் வீட்டுவசதி வாரிய சார்பில் குடியிருப்புகள் கட்டுவதற்காக 1987ஆம் ஆண்டில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. மாடக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 13 பேர்களிடம் 99 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக அறிவிக்கப்பட்ட இழப்பீடு தொகை குறைவாக இருப்பதாகக் கூறி, கூடுதலாக இழப்பீடு வழங்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் ரூபாய் 8 லட்சத்து 70 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இத்தொகையை வழங்க வீட்டுவசதி வாரியம் தாமதம் செய்து வந்தது.

இதுதொடர்பாக நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, இன்று(செப்டம்பர் 3) நில உரிமையாளர்களின் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்சியர் பயன்படுத்தும் இன்னோவா காரை ஜப்தி செய்து, காரின் முன்பகுதியில் நீதிமன்ற உத்தரவை ஒட்டினர்.

அதுபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பேருந்து மோதி உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவின்படி சென்னை கோயம்பேட்டில் நின்றிருந்த 3 அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.

-வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வெள்ளி 3 செப் 2021