மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

தமிழில் அர்ச்சனை திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது: நீதிமன்றம்!

தமிழில் அர்ச்சனை திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது: நீதிமன்றம்!

தமிழ்நாட்டில் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

’அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டம் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி,மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள 47 திருக்கோயில்களில் இந்த நடைமுறை செயல்பாட்டிற்கு வந்தது. அதன்படி திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர், செல்பேசி எண் ஆகிய விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை கோயில்களில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த மனு மீண்டும் இன்று(செப்டம்பர் 3) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 1998ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என தீர்ப்பளித்துள்ளதாகவும், கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிப்படியான நடைமுறைகளை மாற்ற முடியாது எனவும், மத விவகாரங்களில் அரசு தலையிட முடியாது எனவும் வாதிட்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2008ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது. தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளதாகவும், குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஏற்கனவே உயர் நீதிமன்றம் பரிசீலித்து அளித்த தீர்ப்புக்கு முரணான முடிவை எடுக்க முடியாது. ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்ய அவசியமும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

-வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வெள்ளி 3 செப் 2021