மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: தவா பனீர் டிக்கா

ரிலாக்ஸ் டைம்: தவா பனீர் டிக்கா

பொதுவாக பனீர் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும். பனீரை நீங்கள் பொரித்தோ அல்லது மசாலா செய்தோ சாப்பிடலாம். எப்படி செய்தாலும் இது சுவை மிகுந்தது. இந்த தவா பனீர் டிக்கா எப்படி சுவை வாய்ந்ததோ... அதேபோல் சத்துகளும் நிறைந்தது.

எப்படிச் செய்வது?

துண்டுகளாக நறுக்கிய 200 கிராம் பனீர் மற்றும் பெரிதாக நறுக்கிய இரண்டு குடமிளகாயில் தேவையான அளவு உப்பு, மூன்று டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு, ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்பு டிக்கா குச்சியில் முதலில் குடமிளகாயைக் குத்தவும். பின்பு, பனீர் துண்டுகளைக் குத்தவும். மீண்டும் குடமிளகாயைக் குத்தவும். இதேபோல் அனைத்து பனீரையும் குடமிளகாயையும் குத்தி, தவாவில் வெண்ணெய் சேர்த்து நன்கு இருபக்கமும் வாட்டவும். சுவையான பனீர் டிக்கா தயார்.

சிறப்பு

பனீரில் கால்சியமும், புரதச்சத்துகளும் நிறைந்துள்ளன. உடல் எடையை குறைக்கவும் பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தவும் பனீர் உதவும்.

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

வெள்ளி 3 செப் 2021