மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: நூடுல்ஸ் பர்கர்

கிச்சன் கீர்த்தனா: நூடுல்ஸ் பர்கர்

பிறந்த நாள் அன்று நீளமான நூடுல்ஸைச் சாப்பிட்டால் ஆயுளும் நீளமாக அமையும் என்பது சீனர்களின் நம்பிக்கை. ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அன்று நீள நூடுல்ஸைச் சமைத்து உண்பது சீனர்களின் பாரம்பர்ய வழக்கம். சீனர்களின் புத்தாண்டுக் கொண்டாட்ட விருந்திலும் இந்த நூடுல்ஸ் இடம்பெறுகிறது. அவற்றில் இந்த நூடுல்ஸ் பர்கரும் ஒன்று. அப்படிப்பட்ட பர்கரை நீங்களும் செய்து இந்த நாளை கொண்டாடலாம்.

என்ன தேவை?

நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்

பர்கர் பன் - 3 அல்லது 4

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டேபிள்ஸ்பூன்

காய்கறிக் கலவை (நறுக்கிய கேரட், குடமிளகாய், பீன்ஸ், கோஸ்) - ஒரு கப்

தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்

வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

சீஸ் சிங்கிள்ஸ் - தேவையான அளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, காய்கறிகளைச் சேர்த்து நன்கு வதக்கவும். நூடுல்ஸ் பாக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி நூடுல்ஸை வேகவைத்து, காய்கறிகள் சேர்த்துக் கிளறி பவுலுக்கு மாற்றவும். அதனுடன் சோள மாவு, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து சிறிய உருண்டைகளாகச் செய்து, கட்லெட்கள் போல தட்டவும்.

தோசைக்கல்லைக் காயவைத்துத் தட்டிய கட்லெட்களை வைத்துச் சுற்றிலும் சிறிதளவு எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். பர்கர் பன்னை குறுக்கே இரண்டாகப் பிளக்கவும். வெண்ணெயில் லேசாக டோஸ்ட் செய்யவும். ஒரு பாதி பன்னில் நூடுல்ஸ் கட்லெட் வைக்கவும். அதன் மீது சீஸ் ஸ்லைஸ் வைத்து, மேலே இறுதியாக பர்கரின் மற்றொரு பாகத்தை வைத்து மூடி, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: நூடுல்ஸ் ஃபிராங்கி

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

3 நிமிட வாசிப்பு

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

4 நிமிட வாசிப்பு

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

3 நிமிட வாசிப்பு

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

வெள்ளி 3 செப் 2021