மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

சுங்கக்கட்டணம் உயர்வு: அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!

சுங்கக்கட்டணம் உயர்வு: அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!

மளிகை பொருட்கள், காய்கறிகளை ஏற்றிச்செல்லும் லாரிகள் சுங்கக்கட்டணங்களில் இனி கூடுதல் தொகையைச் செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், லாரி வாடகை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மளிகை பொருட்கள், காய்கறி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. விக்கிரவாண்டி, கொடை ரோடு, திருச்சி மனவாசி, சேலம் முத்துபேட்டை, புதுவை மொரட்டாண்டி, சேலம் நத்தக்கரை, ஓமலூர், தர்மபுரி பாளையம், திருச்சி பொன்னம்பலப்பட்டி, மதுரை புதுப்பாண்டியாபுரம், சமயபுரம், உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி, திருமாந்துறை, சேலம் வைகுந்தம், தஞ்சாவூர் வாழவந்தான்கோட்டை, சேலம் வீரசோழபுரம், கரூர் வேலன்செட்டியூர், குமாரபாளையம் விஜயமங்கலம், மதுரை இளையார்பட்டி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு அமலாகி இருக்கிறது.

இந்த சுங்கச்சாவடிகள் அனைத்திலும் ரூ.5 முதல் 60 வரை வாகனங்களுக்கேற்ப சுங்கக்கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டண உயர்வால் சொந்த கார்களைப் பயன்படுத்தும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் வாடகை கார் உரிமையாளர்களும், லாரி அதிபர்களும் தங்களது வாகனங்களுக்குக் கூடுதலாக செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. லாரிகள் மூலமாகவே அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள், காய்கறி உள்ளிட்டவை எடுத்துச் செல்லப்படுகின்றன. இதுபோன்ற சரக்குகளை ஏற்றிச்செல்லும் லாரிகள் சுங்கக்கட்டணங்களில் இனி கூடுதல் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், லாரி வாடகை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

டீசல் விலை ஏற்கனவே 100-ஐ தொட்டுள்ள நிலையில் தற்போது சுங்கக்கட்டணம் உயர்ந்திருப்பதும், கூடுதல் சுமையாகவே கருதப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு உணவு, எண்ணெய், டேங்கர் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர் ஜானகிராமன், “சுங்கக்கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வது தவிர்க்க முடியாததாகவே மாறிவிடும். 20 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்தச் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் சரக்கு லாரிகளுக்கு நிச்சயம் இனி கூடுதல் செலவு ஏற்படும். அதன் காரணமாக லாரி வாடகை உயர்ந்து, அதில் ஏற்றி செல்லப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலாவதியான 15 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு பரனூர், மதுரவாயல் ஆகிய சுங்கச்சாவடிகளும் காலாவதியானவைதான். இதுபோன்ற சுங்கச்சாவடிகளை அகற்றினாலே பாதி சுமை குறையும்.

எனவே தமிழக அரசு இந்த வி‌ஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அவைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-ராஜ்

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

வியாழன் 2 செப் 2021