மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்வு!

அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்வு!

அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.3 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதை அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,”தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய மொத்த தொகை ரூ .5,00,000 ஆக உயர்த்தப்படும்.

செப்டம்பர் மாதம் முதல் இதற்காக மாதாந்திர பிடித்தம் ரூபாய் 60லிருந்து ரூ.110 ஆக உயர்த்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தை நிர்வகிக்கும் தற்போதைய விதிகள் மற்றும் பிற அறிவுறுத்தல்கள் தொடரும். இந்த உத்தரவு 01-09-2021 முதல் நடைமுறைக்கு வரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, அகவிலை படி உயர்வு, போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்தல், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அரசு ஊழியர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது திமுக அரசு ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் ஆகியும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் எந்தவித முடிவும் எடுக்காமல் இருப்பது அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் மாவட்ட வாரியாக அடையாள போராட்டத்தையும் நடத்தினர். இருப்பினும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால், இந்த அரசு மீது ஊழியர்கள் கோபத்துடன் உள்ளனர்.

இந்நிலையில் அரசு ஊழியர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

-வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வியாழன் 2 செப் 2021