மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

மாணவியின் தாயாருக்கும் பாலியல் தொல்லை கொடுத்த சிவசங்கர்

மாணவியின் தாயாருக்கும் பாலியல் தொல்லை கொடுத்த சிவசங்கர்

பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர் சிபிசிஐடி போலீசார்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி டெல்லியில் சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர்.

சிவசங்கர் பாபாவின் பள்ளியில் உள்ள சொகுசு அறையில் இருந்து எடுக்கப்பட்ட லேப்டாப் மற்றும் மெயில் ஐடி, பென் டிரைவ், சிடிக்கள் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் சிவசங்கர் பாபாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் அப்பள்ளி ஆசிரியைகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மாணவிகள் அளித்த புகார்களின் பேரில் சிவசங்கர் பாபா மீது தனித்தனியாக 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் இரண்டு வழக்குகளில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தன. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்த ஜாமீன் மனுவில் தான் ஆண்மையற்றவர் என்பதால் யாரையும் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. சென்னை அரசு மருத்துவமனையில் தனக்கு மேற்கொண்ட ஆண்மை பரிசோதனையில் தனக்கு ஆண்மை இல்லை என முடிவு வந்ததாக குறிப்பிட்டிருந்த தகவல் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பெங்களூரைச் சேர்ந்த பள்ளி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் மாணவியின் தாயாருக்கும் சிவசங்கர் பாபா பாலியல் தொந்தரவு அளித்ததால் அவர் மீது இந்த புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வியாழன் 2 செப் 2021