மாணவர்களுக்கு உயிர்மெய் எழுத்துகள் பாடம் நடத்திய ஆட்சியர்!

public

சிவகங்கை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தமிழ் இலக்கணம் பாடம் எடுத்த சம்பவம் மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, நேற்று முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகள் இயங்க ஆரம்பித்துள்ளன. பள்ளி திறப்பின் முதல் நாளான நேற்று மாணவர்களுக்கு இனிப்பு, பூக்கள் வழங்கி, சிவப்பு கம்பளம் விரித்து ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மாவட்ட ஆட்சியர்கள் நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டு வந்தனர்.

சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று (செப்டம்பர் 1) மாவட்ட ஆட்சியர் மசூதனன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். அப்போது 10ஆம் வகுப்பறைக்குள் நுழைந்த ஆட்சியர், மாணவர்களுக்கு உயிர்மெய் எழுத்துகள் குறித்து பாடம் நடத்தினார். பின்பு அதுதொடர்பாக மாணவர்களிடம் கேள்விகளைக் கேட்டார். பதிலளித்த மாணவர்களை ஆட்சியர் பாராட்டினார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆட்சியர் தமிழ் இலக்கணம் பாடம் நடத்தியது அங்குள்ள ஆசிரியர்களையும், அதிகாரிகளையும் வியக்க வைத்தது.

இதுகுறித்து ஆட்சியர் மசூதனன் ரெட்டி கூறுகையில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுத்தது எனக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 415 பள்ளிகள் திறக்கப்பட்டு, 5,443 ஆசிரியர்கள் பணிக்கு வந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் 26,000 மாணவர்கள், தனியார் பள்ளிகளில் 14,000 மாணவர்கள் வருகை புரிந்துள்ளனர்.

மாவட்டத்தில் 82 மாணவர் விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. இங்கே தேவையான வசதிகளை செய்து கொடுப்பதுடன், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வுமூலம் கண்காணிப்பார்கள்” என்று கூறினார்.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *