மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

தாலிக்கு தங்கம்: அரசின் புதிய விதிமுறைகள்!

தாலிக்கு தங்கம்: அரசின் புதிய விதிமுறைகள்!

தமிழ்நாடு அரசின் சமூகநலத் துறை மூலம் வழங்கப்படும் திருமண உதவித்தொகை திட்டமான ‘தாலிக்கு தங்கம்’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.

1989ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி திருமண நிதி உதவி தொகை திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் தாலிக்கு தங்கமும் சேர்த்து அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. அதன்படி, பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் ரூ.50,000 பணமும், அதற்கு கீழ் கல்வி தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் மற்றும் 25,000 ரூபாய் பணமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பணம் மற்றும் தங்க நாணயமானது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ஏழ்மை நிலைமையில் இருக்கும் தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்பதாலும், இத்திட்டத்தினை சிறப்பான செயல்படுத்திட வேண்டும் என்பதாலும், தமிழ்நாடு அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு விண்ணப்பிப்போர் வீட்டில் யாரேனும் அரசு பணியில் இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது திருமண நிதியுதவித்திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளாரா என்பதை கள ஆய்வு செய்து உண்மை என தெரிய வருமாயின் அதற்கான காரணத்தை மனுதாரருக்கு தெரிவித்து விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மணமகளுக்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும் நிரம்பியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்கும் மனுதாரர் மாடி வீடு, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தால் உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000 இருப்பதை வருமானச் சான்றிதழை அரசு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

திருமண மண்டபங்களில் நடந்த திருமணங்களுக்கு நிதியுதவி தொகை விண்ணப்பிப்பவரின் மனு தள்ளுபடி செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

புதன் 1 செப் 2021