மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

பத்தாண்டு கால கோரிக்கையை பத்து நிமிடத்தில் நிறைவேற்றிய ஆட்சியர்!

பத்தாண்டு  கால கோரிக்கையை பத்து நிமிடத்தில் நிறைவேற்றிய ஆட்சியர்!

பத்து ஆண்டுகளாக தனக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்த மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் 10 நிமிடத்தில் நிறைவேற்றி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசின் தலைமை செயலாளர், ஐபிஎஸ்,ஐஏஎஸ் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரை அனைவரும் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தின் தற்போதைய மாவட்ட ஆட்சியர் மோகன்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று(செப்டம்பர் 1) பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் ஆய்வு செய்துவிட்டு அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆட்சியர் வளாகப் பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலில் இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில், கையில் செருப்பு அணிந்தவாறு மாற்றுத்திறனாளி ஒருவர் சென்று கொண்டிருந்தார்.

அதை பார்த்த ஆட்சியர் மோகன் காரிலிருந்து இறங்கி அவரிடம் சென்று விசாரித்தார். அப்போது, நெற்குணத்தைச் சேர்ந்த முனியப்பன் ஆட்சியரிடம் தன் நிலை பற்றி கூறினார். சிறு வயதிலிருந்தே இளம்பிள்ளை நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் செயல் இழந்துவிட்டது. துணி தைக்கும் வேலை செய்து வருகிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கொடுத்த மூன்று சக்கர சைக்கிள் உடைந்து விட்டது. அதனால், தனக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்க வேண்டும் என 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருவதாக கூறினார்.

இதையடுத்து, உடனடியாக மாற்றுத்திறனாளி நல அலுவலரை தொடர்பு கொண்ட ஆட்சியர் மோகன், சம்பவ இடத்திற்கு பத்து நிமிடத்தில் மூன்று சக்கர சைக்கிளை வரவழைத்து முனியப்பனுக்கு வழங்கினார். 10 ஆண்டுகாலமாக நிறைவேற்றப்படாத தனது கோரிக்கையை பத்தே நிமிடத்தில் நிறைவேற்றி வைத்த ஆட்சியர் மோகனுக்கு மாற்றுத்திறனாளி முனியப்பன் நன்றி தெரிவித்து விட்டு மூன்று சக்கர சைக்கிளில் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு திரும்பினார்.

-வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

புதன் 1 செப் 2021