மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

பள்ளிகள் திறப்பு :மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!

பள்ளிகள் திறப்பு :மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!

தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, இன்று காலையில் மாணவ, மாணவிகள் சீருடைகளை அணிந்து ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளி நுழைவு வாயிலில் மாணவர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கபட்டனர்.

சுழற்சி முறையில் வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் இயங்கும். முதல் 45 நாட்கள் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நீண்ட நாட்கள் கழித்து பள்ளிக்கு மாணவர்கள் வருவதால் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆசிரியர்கள் பல்வேறு வகையில் வரவேற்பு அளித்துள்ளனர்.

ஈரோட்டில் மாணவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து, பூக்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.

திருவள்ளூர் பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, ஆரத்தி எடுத்து பூக்களை தூவி ஆசிரியர்கள் வரவேற்றனர். இதுபோன்று பல்வேறு மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பள்ளிக்கு வர விருப்பம் இல்லாத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் எடுக்கப்படும்.

-வினிதா

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

புதன் 1 செப் 2021