மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

ரிலாக்ஸ் டைம்: ராகி ரிப்பன் பக்கோடா!

ரிலாக்ஸ் டைம்: ராகி ரிப்பன் பக்கோடா!

ஊட்டச்சத்துகளின் சுரங்கமாக விளங்கும் சிறுதானியங்களின் பெருமையை உணர்ந்து, அவற்றைப் பற்றி தெரிந்துகொள்வதிலும், சிறுதானியங்களைப் பயன்படுத்தி உணவு வகைகளைச் செய்து பரிமாறுவதிலும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நீங்களும் இந்த ராகி ரிப்பன் பக்கோடா செய்து வீட்டிலுள்ளவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

எப்படிச் செய்வது?

ராகி மாவு (கேழ்வரகு மாவு), அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு தலா 200 கிராம் எடுத்துக்கொள்ளவும். மாவு வகைகள் அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு இரண்டு டீஸ்பூன் எள், சிறிதளவு பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு, இரண்டு டீஸ்பூன் வெண்ணெய் அல்லது சூடான எண்ணெய் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு முறுக்கு மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மாவை ரிப்பன் பக்கோடா அச்சில் நிரப்பவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவைப் பிழிந்தெடுக்கவும். சத்தான, சுவையான ரிப்பன் பக்கோடா தயார்.

சிறப்பு

எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் சத்து மிக அவசியம். கேழ்வரகில் மற்ற தானியங்கள், அரிசி போன்றவற்றைவிட அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற (மெனோபாஸ்) பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) ஏற்படாமல் தடுக்க கேழ்வரகு உதவும்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

புதன் 1 செப் 2021