மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

கல்லூரிகளில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்குத் தடை!

கல்லூரிகளில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்குத் தடை!

தமிழ்நாட்டில் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கக் கூடாது என கல்லூரி முதல்வர்களுக்கு, கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, இன்று முதல் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, இன்று (செப்டம்பர் 1) முதல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. பேராசிரியர்கள், மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்றும், மூன்றாமாண்டு மாணவர்களுக்கு நாளையும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். முதலாமாண்டு மாணவர்களுக்குச் சில காலம் ஆன்லைனிலே வகுப்புகள் தொடரும்.

பி.இ, பி.டெக், பி.எஸ்ஸி (வேளாண்மை) உள்ளிட்ட நான்கு ஆண்டு பட்டப்படிப்பில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வாரத்தின் ஆறு நாட்களும் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கல்லூரி கல்வி இயக்குநர் பூரண சந்திரன் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அனைத்து கல்லூரிகளிலும் கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் கல்வி சார்ந்த கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை. கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருப்பதை கல்லூரி முதல்வர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

-வினிதா

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

புதன் 1 செப் 2021