மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: நூடுல்ஸ் பீட்சா

கிச்சன் கீர்த்தனா: நூடுல்ஸ் பீட்சா

வாரத்தின் ஏழு நாள்களும் செய்து கொடுத்தாலும் வீட்டிலுள்ள குட்டீஸுக்கு அலுக்காத உணவு நூடுல்ஸ். சமைப்பவர்களுக்கு வேண்டுமானால் அலுத்துப்போகுமே தவிர, சாப்பிடும் குழந்தைகளுக்குக் கொஞ்சமும் அலுப்பதே இல்லை நூடுல்ஸ். அப்படிப்பட்ட நூடுல்ஸில் அனைவரும் விரும்பும் பீட்சா செய்தும் சாப்பிடலாம்.

என்ன தேவை?

நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

குடமிளகாய் (பச்சை, சிவப்பு, மஞ்சள்) - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)

தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 3 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 3 டீஸ்பூன்

சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்

சீஸ் துருவல் - அரை கப்

பீட்சா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

நூடுல்ஸ் பாக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி நூடுல்ஸை வேகவைத்து ஒரு பவுலுக்கு மாற்றவும். சோள மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். பேனை (Pan) காயவைத்துச் சிறிதளவு எண்ணெய்விட்டுத் தடவவும். அதன் மீது பாதியளவு நூடுல்ஸ் கலவையைப் பரப்பவும். அடுப்பைச் சிறு தீயில் வைத்து மூடிபோட்டு வேகவிடவும். பிறகு திருப்பிப் போட்டு, பீட்சா சாஸ் தடவவும். அதன் மீது பாதியளவு வெங்காயம், குடமிளகாய், தக்காளி, சீஸ் துருவல், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் தூவி மூடிபோட்டு, சீஸ் உருகும் வரை வேகவிடவும். பிறகு பாதியளவு உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃப்ளேக்ஸ் தூவி அலங்கரித்துப் பரிமாறவும். இதேபோல் இன்னொரு பாதி நூடுல்ஸ் கலவையிலும் பீட்சா செய்துகொள்ளவும்.

நேற்றைய ரெசிப்பி: நூடுல்ஸ் சமோசா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

புதன் 1 செப் 2021