மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 31 ஆக 2021

சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னையில் இந்த வாரத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்த ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களிலும் சராசரி மழை அளவை விட கூடுதலாகப் பெய்துள்ளது.

சென்னையில் ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 372.2 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 321.2 மி.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இயல்பைவிட கூடுதலாக 16 சதவிகிதம் மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இந்த வாரத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் நாளை (செப்டம்பர் 1) மற்றும் 2ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், “தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நேற்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது.

இன்று வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும், நாளை செப்டம்பர் (1ஆம் தேதி) கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழையும், 2, 3ஆம் தேதிகளில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்” என்று கூறியுள்ளார்.

தனியார் வானிலை விஞ்ஞானிகள் கூறும்போது, செப்டம்பர் மாதத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

செவ்வாய் 31 ஆக 2021