மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 31 ஆக 2021

திட்டங்களின் தாமதத்தால் ரூ.4 லட்சத்து 43,248 கோடி கூடுதல் செலவு!

திட்டங்களின் தாமதத்தால் ரூ.4 லட்சத்து 43,248 கோடி கூடுதல் செலவு!

593 உள்கட்டமைப்பு திட்டங்கள் தாமதமடைவதால் கூடுதலாக 4 லட்சத்து 43,248 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தலா ரூ.150 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட செலவு கொண்ட மொத்தம் 1,781 உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவற்றின் பணி முன்னேற்றம் குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது, கடந்த மாதத்தின்படி உள்ள நிலவரம் ஆகும்.

பணி நடந்து வரும் 1,781 உள்கட்டமைப்பு திட்டங்களின் திட்டமிடப்பட்ட செலவு ரூ.22 லட்சத்து 82,160 கோடி. இவற்றில், 504 திட்டங்கள், திட்டமிட்ட காலத்தை விட தாமதம் அடைந்துள்ளன. மேலும், 89 திட்டங்கள், திருத்தப்பட்ட காலத்தைவிட கூடுதலாக தாமதம் அடைந்துள்ளன. குறிப்பாக, 116 திட்டங்கள் ஐந்து ஆண்டுக் காலத்துக்கு மேல் தாமதத்தை சந்தித்து வருகின்றன.

இதனால், 1,781 திட்டங்களின் மொத்த செலவு ரூ.27 லட்சத்து 25,408 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், மொத்த செலவில் ரூ.4 லட்சத்து 43,248 கோடி அதிகரிக்கும் என்று தெரிகிறது.

அதாவது, மொத்த செலவில் 20 சதவிகிதம் உயர்கிறது. இந்தத் திட்டங்களில் இதுவரை ரூ.13 லட்சத்து 22,516 கோடி செலவாகி உள்ளது. அதாவது, எதிர்பார்க்கப்படும் மொத்த செலவில் 48.53 சதவிகிதம் செலவிடப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துவது, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவது உள்ளிட்டவை தாமதத்துக்கான காரணங்கள் ஆகும். தாமதத்தை சந்தித்துள்ள திட்டங்களில், ரெயில்வே திட்டங்கள்தாம் முதலிடம் வகிக்கிறது. 312 ரெயில்வே திட்டங்கள் நடந்து வரும்நிலையில், 140 திட்டங்கள் தாமதம் அடைந்துள்ளன.

-ராஜ்

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

செவ்வாய் 31 ஆக 2021