மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஆக 2021

எழுத்தாளர் கோணங்கிக்கு கி.ரா.விருது!

எழுத்தாளர் கோணங்கிக்கு கி.ரா.விருது!

இந்தாண்டுக்கான கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் கோணங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு கி.ரா. இலக்கிய விருது வழங்கப்பட்டது. கடந்தாண்டு எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு கி.ரா விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டத்தின் சார்பில் 2021ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு பிரபல எழுத்தாளர் கோணங்கி நடுவர் குழு தேர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கி.ரா விருதுக்கான பரிசுத் தொகையான ரூ. 5 லட்சத்தை சக்தி மசாலா நிறுவனம் வழங்கி வருகிறது. செப்டம்பர் 19 ஆம் தேதியன்று ஜூம் செயலி மூலம் விருது வழங்கும் விழா நடைபெறும்.

கடந்தாண்டு கி.ரா.வின் கையால் விருது வழங்கப்பட்டது. இந்தாண்டு அவர் இல்லை. இந்தியாவில் ஞானபீட விருது, சரஸ்வதி சம்மான் விருது ஆகியவற்றுடன் கி.ரா. விருது ரூ5,00,000 மதிப்புடையதாக பெருமை மிக்க வரிசைகளில் வருகிறது.

1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி கோவில்பட்டி நென்மேனி மேட்டுப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கோணங்கி. இவரது இயற்பெயர் இளங்கோவன் சுதந்திரப் போராட்ட வீரரான மதுரகவி பாஸ்கர தாஸ் அவர்களின் பேரன்தான் எழுத்தாளர் கோணங்கி.இவரது அப்பா சண்முகம், அண்ணன் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோரும் எழுத்தாளர்கள். கல்குதிரை சிற்றிதழின் ஆசிரியரான இவர், ’பாழி’, ’பிதிரா’, ’த’, ’நீர்வளரி’ ஆகிய நான்கு சிறப்பு நாவல்களை எழுதியுள்ளார்.

பாழி, பிதிரா நாவல்கள் மொழிநடையிலும், உள்ளடக்கத்திலும் இதுவரை மரபாக இருந்த பலவற்றை தகர்த்த பெருமை கொண்டது. நான்கு நாவல்களும் இலக்கிய உலகின் கவனம் பெற்று பரவலாக பேசப்பட்டவை.

-வினிதா

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

திங்கள் 30 ஆக 2021