மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஆக 2021

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்த தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தத்தைப் பதிவு செய்ய ரூ. 26.80 கோடியில் பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்த உத்தரவை, ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்தார். அதில், சென்னை நகர மக்களின் குடிநீர் பிரச்சினையை போக்க, நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் இரண்டாவது அலகு அமைக்க முடிவெடுக்கப்பட்டு ஸ்பெயின், ஐக்கிய அரேபிய நாட்டு நிறுவனங்களின் கூட்டு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஜெர்மனி வங்கி கடனுதவியுடன் ஆயிரத்து 259 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

திட்டம் தொடர்பாக கூட்டு நிறுவனங்களின் ஒப்பந்தத்தை பதிவுத் துறையில் பதிவுசெய்ய வேண்டும். இந்நிலையில், ஒப்பந்தத்தைப் பதிவுசெய்வதற்கான கட்டணம் 26 கோடியே 80 லட்சம் ரூபாய் பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்து, 2020 அக்டோபரில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். திட்டத்தைச் செயல்படுத்தும் கூட்டு நிறுவனங்களின் ஒப்பந்தத்தைப் பதிவு செய்வது கட்டாயம். பதிவுக் கட்டணம், திட்டத்தின் நிதியுடன் சேர்ந்ததல்ல என்பதால், கட்டண விலக்கு வழங்கியது சட்ட விரோதமானது என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு இன்று(ஆகஸ்ட் 30) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

திங்கள் 30 ஆக 2021