மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஆக 2021

தெற்கு ரயில்வே: 10 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே: 10 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு!

சென்னை சென்ட்ரல் - கயா உட்பட 10 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஆண்டு மார்ச்சில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சரக்கு ரயில் சேவை இயங்கி வந்தது. கொரோனா இரண்டாவது அலை பாதிப்புகள் குறைந்து காணப்படும் சூழலில் குறிப்பிட்ட அளவிலான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கொரோனா பாதிப்புகளால் வழக்கமாக இயங்க வேண்டிய விரைவு ரயில்கள், முழு அளவில் இயக்கப்படவில்லை. இருப்பினும், தேவையைக் கருத்தில் கொண்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சென்னை சென்ட்ரல் - கயா (02390/02389), பாருனி - எர்ணாகுளம் (02521/02522), பாடலிபுத்தூர் - யஷ்வந்த்பூர் (03251/03252), தர்பாங்கா - மைசூர் (02577/02578), முஜாபர்பூர் - யஷ்வந்த்பூர் (05228/05227) ஆகிய 10 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரயில்கள், மறு அறிவிப்பு வரும் வரை தற்போது இயக்கப்படும் அதே நேரத்தில், அதே வழித்தடத்தில் இயக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

இவற்றுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டன என்றும் அறிவித்துள்ளது.

-ராஜ்

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

ஞாயிறு 29 ஆக 2021