மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஆக 2021

திருமண மண்டப நிகழ்ச்சிகளுக்கு வட்டாட்சியர் அனுமதி கட்டாயம்!

திருமண மண்டப நிகழ்ச்சிகளுக்கு வட்டாட்சியர் அனுமதி கட்டாயம்!

திருமண மண்டப நிகழ்ச்சிகளுக்கு வட்டாட்சியரிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று கோவை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவையிலும் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 200ஐ கடந்துள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கட்டுப்பாடுகளைக் கட்டாயம் கடைப் பிடிக்க வேண்டும் என்று கோவை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், “மாவட்ட நிர்வாகம்‌, கொரோனா தொற்று கட்டுப்பாடுகளைத் தளர்த்த விரும்பும்‌ நேரத்தில், புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும் நிலை எழுந்துள்ளது. கோவையில் கடந்த 4 நாட்களாகத் தொற்று விகிதம்‌ லேசாக உயர்ந்துள்ளதால், அது அதிகமாகாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை ஒரு வாரத்துக்கு முன், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என, அனைத்து திருமண மண்டப உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளையும் பின்பற்றி 50 நபர்களுக்கு மிகாமல் திருமண நிகழ்ச்சி, இதர நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள் மூலம் விதிமுறைகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஞாயிறு 29 ஆக 2021