மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஆக 2021

ரிலாக்ஸ் டைம்: கேரட் உருளைக்கிழங்கு சூப்!

ரிலாக்ஸ் டைம்: கேரட் உருளைக்கிழங்கு சூப்!

காபி, டீயைத் தவிர்க்க நினைக்கிற பலரின் சாய்ஸ் சூப் வகைகள். சில நிமிடங்களில் தயாரித்து அருந்தும் வகையில் இருக்கும் இந்த கேரட் உருளைக்கிழங்கு சூப் அனைவருக்கும் ஏற்றது.

எப்படிச் செய்வது?

வெங்காயம் ஒன்று, உருளைக்கிழங்கு ஒன்று, கேரட் ஒன்றை தோல் நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் சிறிதளவு வெண்ணெய் விட்டு உருக்கியதும் நறுக்கிய வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். ஆறிய பிறகு திறந்து மத்தால் கடையவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறலாம்.

சிறப்பு

அனைத்து வயதினருக்கும் ஏற்ற இந்த சூப்பில் வைட்டமின்கள், கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் அதிக சக்தியையும் புத்துணர்ச்சியையும் தரும்.

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 29 ஆக 2021