மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஆக 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - மட்டன் பிரியாணியும் இறால் தொக்கும்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - மட்டன் பிரியாணியும் இறால் தொக்கும்!

அசைவ உணவுகளை வகை வகையாக சமைத்தாலும் ஏதோ ஒரு சந்தேகம் இருக்கவே செய்கிறது. உதாரணத்துக்கு... குக்கரில் செய்யாமல் வேறு பாத்திரத்தில் மட்டன் பிரியாணி செய்யும்போது மட்டன் வேகாமல் இருக்கிறது. அதை எப்படித் தவிர்க்கலாம்? முட்டையை வேகவைத்து உரிக்கும்போது அதன் ஓடு ஒட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? இறால் தொக்கு தயாரிக்கும்போது ரப்பர் மாதிரி ஆகிவிடுகிறது. அதைச் சரியான பதத்தில் சமைப்பது எப்படி? இப்படிப்பட்ட சந்தேகங்களுக்கான தீர்வுகள் இதோ...

மட்டன் பிரியாணி

கடையில் இளம் ஆட்டுக்கறியாக வாங்கிச் சமைக்க வேண்டும். குக்கரில் பிரியாணி தயாரிக்காமல் பாத்திரத்தில் தயாரிக்கும்போது இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைக் கறியுடன் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அப்போது முழு உப்பையும் சேர்க்காமல் பாதி அளவு உப்பு மட்டுமே சேர்க்க வேண்டும்.

கறி நன்றாக வதங்கிய பின்னரே தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்னர் மீதி உப்பைச் சேர்த்து, அரை மணி நேரமாவது வேகவிட்டால்தான், ஆட்டுக்கறி நன்றாக வேகும். சமைக்கும்போது பாத்திரத்தை மூடி வைத்து, கொதிக்க வைக்க வேண்டும். பாத்திரத்தின் மூடியை அடிக்கடி திறந்து பார்க்காமல், நன்றாகக் கொதிக்கும் வரை பொறுத்திருந்து சமைப்பது சுவையைக் கூட்டும்.

ஒட்டாத முட்டை ஓடு

வேகவைப்பதற்கு முன்பாக பாத்திரத்தில் முட்டைகளை அடுக்கிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரை ஊற்றி, முட்டைகளை வேகவைக்க வேண்டும். அப்படி வேக வைக்கும்போது, சிறிதளவு உப்பு சேர்த்து, அரை எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து விட்டு வேக வைக்கலாம். நன்றாக வெந்ததும் அவற்றை எடுத்து ஓட்டை நீக்கினால், இலகுவாக முட்டை வெளியில் வரும். முட்டைகளை 10 முதல் 15 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.

சீக்கிரம் வேக வேண்டும் என்பதற்காக அதிக தணலில் வேக வைப்பது, அதில் வெந்நீரை ஊற்றுவதெல்லாம் கூடாது. இப்படிச் செய்தால் முட்டை வெடித்து அதன் உள்ளே இருக்கும் பகுதி வெளியில் வரத் தொடங்கும். வேகவைத்த முட்டைகளை 5 நிமிடங்கள் ஆற விட வேண்டும். பிறகு குளிர்ந்த நீரை சிறிதளவு அவற்றின் மேல் ஊற்றி, ஒவ்வொரு முட்டையாக எடுத்து உரித்தால், இலகுவாக வரும். சூடாக இருக்கும்போது முட்டையை உரிக்கக் கூடாது.

இறால் தொக்கு

இறால் தொக்கு செய்யும்போது தக்காளி, வெங்காயம், மசாலா பொருள்களைச் சேர்த்து வதக்கி வைத்துக்கொண்டு இறாலை 10 முதல் 12 நிமிடங்கள் வரை மட்டுமே வேகவைக்க வேண்டும். அப்படி வேகவைத்தால் மட்டுமே இறால் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.

15 நிமிடங்களுக்கு மேல் இறாலை வேகவைத்தால் ரப்பர் போல மாறிவிடும். சுவையும் இருக்காது. அதிக தணலில் சமைப்பதால் 10 முதல் 12 நிமிடங்கள், குறைந்த தணலில் சமைப்பதென்றால் 15 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம். எந்த உணவை சமைக்கவும் அதற்குரிய நேரம் மிகவும் முக்கியம். அதைத் தாண்டி சமைத்தால் சுவை நிச்சயம் மாறும்.

நேற்றைய ரெசிப்பி: இடியாப்பம் - தேங்காய் சுக்குப்பால்!

.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஞாயிறு 29 ஆக 2021