மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஆக 2021

மனசாட்சிக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதில்லை: நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்

மனசாட்சிக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதில்லை: நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்

கடந்த 12 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளித்து இருந்தாலும், மனசாட்சிக்கு விரோதமாக ஒருபோதும் தீர்ப்பளித்தது இல்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்துக்கு மூன்று பெண் நீதிபதிகள் உள்பட 9 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதில் சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷூம் ஒருவர்.

ஈரோட்டைச் சேர்ந்த இவர் 1985 வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார். பின்பு, 2009ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது 59 வயதில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு நேற்று (ஆகஸ்ட் 27) உயர் நீதிமன்ற வளகத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், ' '24 ஆண்டுகளாக வழக்கறிஞராகவும், 12 ஆண்டுகள் நீதிபதியாகவும் நீதிபதி சுந்தரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியுள்ளார். ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 563 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார்” என்று பேசினார்.

பாராட்டுக்கு நன்றியை தெரிவித்து கொண்டு பேசிய நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்,” டெல்லி செல்வதை பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடு செல்லும் மணப்பெண்ணைப் போலவும், பள்ளி படிப்பை முடித்து மேல் படிப்புக்கு செல்லும் மாணவனைப் போலவும் உணர்கிறேன். பிரிவு எப்போதும் சிக்கலானது தான் என்றாலும் வாழ்க்கை முன்னோக்கி செல்ல வேண்டும்.

ராமாயணத்தில் மன்னராக முடிசூடிய சுக்ரீவனுக்கு, அனைவரையும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும் என ராமன் அறிவுரை கூறினார்.

அதுபோன்று, அனைவரையும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும். கடந்த 12 ஆண்டுகளில் நான், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளித்து இருந்தாலும், மனசாட்சிக்கு விரோதமாக ஒருபோதும் தீர்ப்பளித்தது இல்லை” என்று உருக்கமாக பேசினார்.

தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் சார்பில், தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி சுந்தரேஷுக்கு கேடயம் மற்றும் நினைவுப் பரிசை வழங்கினார்.

நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருபாகரன் ஓய்வு பெற்றது, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை, 56 ஆக குறைந்துள்ளது. மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75 என்ற நிலையில், காலியிடங்கள்19 ஆக அதிகரித்துள்ளது.

-வினிதா

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

சனி 28 ஆக 2021