மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஆக 2021

சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தினமும் பரிசு: திருப்பத்தூர் எஸ்.பி!

சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தினமும் பரிசு: திருப்பத்தூர்  எஸ்.பி!

காவல் பணியை சிறப்பாக செய்யும் காவலர்களுக்கு தினமும் பரிசு வழங்கப்படும் என்று திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பியாக பணியாற்றி வரும் சிபி சக்கரவர்த்தி அம்மாவட்டத்தில் மணல் கடத்தல், திருட்டு,வழிப்பறி போன்ற சம்பவங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். நான்கு நாட்கள் முன்னதாக கூட நள்ளிரவு 1 மணியளவில் மணல் கடத்தி சென்ற 2 டிப்பர் லாரியை எஸ்.பி. தலைமையிலான டீம் பறிமுதல் செய்தது.

இந்நிலையில், திருட்டு, வழிப்பறி, போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும், இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் கவனமாக செயல்படவும், காவலர்களை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் எஸ்.பி.சிபி சக்கரவர்த்தி.

இதுகுறித்து அவர் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், விபத்து, குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகமாக குவிந்துள்ளன. இதை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் 150 வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு காவல் உட்கோட்டத்திலும் பொறுப்பாளர்கள் நியமிக்கபட உள்ளனர். சிறப்பாக பணி செய்யும் காவலர்களுக்கு நாள் தோறும் ரொக்கப்பரிசு வழங்கப்படும். குற்றங்கள் நடைபெறுவதை முற்றிலும் தவிர்க்க, பல புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம்” என்று கூறினார்.

-வினிதா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

சனி 28 ஆக 2021