மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஆக 2021

பண்டிகை கூட்டத்தை தவிர்க்க கட்டுப்பாடு விதிக்கலாம்!

பண்டிகை கூட்டத்தை தவிர்க்க கட்டுப்பாடு விதிக்கலாம்!

வரவிருக்கும் பண்டிகை காலத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வந்தாலும், மூன்றாவது அலை குறித்த அச்சம் அனைவரிடமும் உள்ளது. அதனால், தொடர்ந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், ஏற்கனவே ஒன்றிய அரசு அமல்படுத்திய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் செப்டம்பர் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு இன்று(ஆகஸ்ட் 28) எழுதிய கடிதத்தில்,” தேசிய அளவில் கொரோனா தொற்று ஒரு நிலையான இடத்திற்கு வந்துள்ள நிலையில், சில மாநிலங்களில் ஓரிரு இடங்களில் மட்டும் சமூகப் பரவலாக காணப்படுகிறது. சில மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து உயர்ந்து காணப்படுவது கவலை அளிக்கிறது. அதிகமாக தொற்று எண்ணிக்கை உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் தொற்று எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

நோய்த்தொற்று அதிகரிப்பதை முன்கூட்டியே உணர்ந்து உரிய முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். வருகிற மாதங்களில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருகின்றன. இந்த காலத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால், இதுபோன்ற கூட்டங்களைத் தடுக்க உள்ளூர் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம். கொரோனா தடுப்பு வழிமுறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்துவதில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்னும் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதிபடுத்த தடுப்பூசி இயக்கங்களை ஆரம்பித்து செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

சனி 28 ஆக 2021