மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஆக 2021

ஜோதிடம் குறித்து விழிப்புணர்வு: அரசுக்கு உத்தரவிட முடியாது!

ஜோதிடம் குறித்து விழிப்புணர்வு: அரசுக்கு உத்தரவிட முடியாது!

ஜோதிடம் தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட மறுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

மதுரையைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ஜோதிட மூட நம்பிக்கை பல இளைஞர்களின் வாழ்க்கையை பாதித்து, அவர்களை குற்றவாளிகளாகவும், போதை அடிமைகளாவும் மாற்றுவதால் ஜோதிடம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஜோதிடம் அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்படவில்லை, அதனால் இதுகுறித்து பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு அரசுக்கும் இஸ்ரோவுக்கும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட் 28) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மனுதாரர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பாரட்டதக்கதாக இருந்தாலும், தனிநபரின் நம்பிக்கை சம்பந்தப்பட்டுள்ளதால்,மனுதாரர் கோருவது போல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த பிரபஞ்சம் உருவானது குறித்த அறிவியல் என்பது ஆரம்ப நிலையில் இருப்பதாகவும், அண்டம் குறித்த பல கேள்விகளுக்கு இன்னும் விடை காண முடியவில்லை என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு, மூட நம்பிக்கை போன்ற தீமைகளை களைய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

-வினிதா

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

3 நிமிட வாசிப்பு

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

4 நிமிட வாசிப்பு

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

3 நிமிட வாசிப்பு

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

சனி 28 ஆக 2021