மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஆக 2021

டெல்டா வைரஸால் அதிக பாதிப்பு!

டெல்டா வைரஸால் அதிக பாதிப்பு!

தமிழ்நாட்டில் டெல்டா வகை வைரஸாலே அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று(ஆகஸ்ட் 28) காலை அரசு நந்தனம் கலைக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பொன்முடி மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, “செப்டம்பர் 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்போது அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுதான் கல்லூரிக்கு வர வேண்டும்.நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்போது மாணவர்கள், பேராசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும். பொறியியல் கல்லூரிகளை விட கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உயர்கல்வி துறை உறுதுணையாக இருக்கும்” என்று கூறினார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,” சென்னை மாவட்டத்தில் 90.11% ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 112 கல்லூரிகளுக்கும், நேரில் சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வரும் செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கும். தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு, கல்லூரிகளுக்கே வந்து தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினந்தோறும் அதிகாலையில் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் என்னிடம் கேட்பார். இந்தியாவில் எந்த மாநில முதல்வரும் இவ்வளவு தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதில்லை. ஆனால் நம் மாநில முதல்வர் கட்டுமானத் தொழிலாளர்கள், விளையாட்டு வீரர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தொடங்கி வைத்துள்ளார். விரைவில் தமிழ்நாடு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற நிலையை அடையும்” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “ தமிழ்நாட்டில் டெல்டா வகை கொரோனாவாலதான் அதிக பாதிப்பு இருக்கிறது. சமீபத்தில் 222 மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில், 100 சதவிகிதமும் டெல்டா பாதிப்பு என்று முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகமாக கூட்டம் கூடுகிற இடங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்படும். டெல்டா வகை கொரோனா குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஏற்கனவே டெல்டா வகை பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், அதற்கான சிகிச்சை முறைகளும் நம்மிடம் உள்ளது. ஆனால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வருகிற மாதம் பண்டிகை காலம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா வகையை கண்டறியும் ஆய்வகம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் சோதனை அடிப்படையில் செயல்பட தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

சனி 28 ஆக 2021