மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஆக 2021

மறுபதிவை தவிர்க்க பாரத் வரிசை பதிவு முறை அறிமுகம்!

மறுபதிவை தவிர்க்க பாரத் வரிசை பதிவு முறை அறிமுகம்!

ஒரு மாநிலத்தில் பதிவு செய்த வாகனத்தை வேறு மாநிலத்துக்கு கொண்டு செல்லும்போது மறு பதிவு செய்வதை தவிர்க்கும் வகையில் பாரத் வரிசை கொண்ட பதிவெண் முறையை ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

வேலை, படிப்பு காரணமாக ஒரு மாநிலத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும்போது சிலர் அவர்களின் வாகனங்களையும் எடுத்து செல்கின்றனர். அப்படி கொண்டு செல்லப்படுகின்ற வாகனங்களை ஓராண்டுக்குள் மறுபதிவு செய்து, சாலை வரியும் கட்ட வேண்டும். இந்த சிரமத்தை தவிர்க்கும் முறையில் புதிய பதிவு முறையை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் வாகனங்களை பதிவு செய்வதை தவிர்க்க பாரத் வரிசை(BH) பதிவெண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பாதுகாப்பு துறை அலுவலர்கள், ஒன்றிய, மாநில அரசு பணியாளர்கள், பொது துறை பணியாளர்கள் மற்றும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அலுவலகங்களைக் கொண்ட தனியார் நிறுவனங்கள் இந்தப் பதிவு வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாகனங்களை பாரத் வரிசையில் பதிவு செய்ய இரு ஆண்டுகளுக்கு சேர்த்து சாலை வரியை செலுத்த வேண்டும். இதற்காக ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை. ஆன்லைனிலேயே பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

YY BH 4144 XX என்ற பார்மெட்டில் வாகனங்களில் பதிவெண் பொருத்தப்படும். YY என்பது வாகனம் ரெஜிஸ்டர் செய்த ஆண்டின் முதல் பதிவை குறிக்கும். அதற்குப் பின் BHக்கு அடுத்துள்ள நான்கு நம்பர்கள் ரேண்டமாக வழங்கப்படும். அடுத்ததாக உள்ள XX ஏதேனும் இரண்டு ஆங்கில எழுத்துகளை கொண்டிருக்கும்.

-வினிதா

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

சனி 28 ஆக 2021