மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 ஆக 2021

கையகப்படுத்தப்படும் கோயில் நிலங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு!

கையகப்படுத்தப்படும் கோயில் நிலங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு!

கையகப்படுத்தப்படும் கோயில் நிலத்திற்கு நிலம் கையகப்படுத்தும் சட்டப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, வீரசோழபுரம் என்னுமிடத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோயில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை விதிக்க கோரியும், அனுமதியின்றி கட்டுமான பணிகளை மேற்கொள்வதாகவும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று(ஆகஸ்ட் 26) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது,ஒப்பந்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்டுமான பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்த போது, சுற்றுச்சுழல் மற்றும் நகரமைப்பு திட்ட அனுமதி பெறவில்லை. தற்போது அனுமதி பெற்றுள்ளதால் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், அதிகாரிகள் நிர்ணயிக்கும் இழப்பீடு தொகை கோயிலுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் தரப்பில், ஏற்கனவே நிலத்தை மதிப்பீடு செய்த மதிப்பீட்டாளர் முறையாக மதிப்பீடு செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து கோயில் நிலத்தை கையகப்படுத்துவதாக இருந்தால், 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டப்படி உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். குத்தகைக்கு எடுப்பதாக இருந்தால் அப்போதைக்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் குத்தகை தொகையை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அன்றைய தினம் நிலத்தை மதிப்பீடு செய்ய 4 அல்லது 6 தகுதி பெற்ற மதிப்பீட்டாளர்களை பரிந்துரைக்க வேண்டும் என மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வெள்ளி 27 ஆக 2021