மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 ஆக 2021

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை!

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை!

வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ இன்று(ஆகஸ்ட் 27) வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக் கூடும்.

வளிமண்டலத்தில் ஈரப்பதத்துடன் கூடிய மேற்கு திசை காற்று வலுவடைவதன் காரணமாக வருகின்ற 28ஆம் தேதி நீலகிரி ,தேனி ,திண்டுக்கல், திருப்பூர் ,கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் ” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மாலை 5.10 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தகவலின்படி, சென்னையில் அயனாவரம், சைதாப்பேட்டை, அண்ணா நகர், பெரம்பூர், கொரட்டூர், அம்பத்தூர் கோட்டூர்புரம், தியாகராய நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும், சென்னையின் சுற்று வட்டாரப் பகுதிகளான புழல், செங்குன்றம், சோழவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 27 ஆக 2021