மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 ஆக 2021

அதிக சிசிடிவி கொண்ட நகரங்கள்: சென்னைக்கு எந்த இடம்?

அதிக சிசிடிவி கொண்ட நகரங்கள்: சென்னைக்கு எந்த இடம்?

உலகிலேயே சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை அதிகம் கொண்ட நகரங்கள் பட்டியலில் சென்னை மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

நாட்டின் மூன்றாவது கண் என அழைக்கப்படும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பல குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறிய முடிகிறது. சிசிடிவி பயன்பாடு நகரத்தில்போன்று கிராமத்திலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பொது இடங்களை கண்காணிப்பதில் அதிகம் கவனம் செலுத்தும் 20 நகரங்களின் பட்டியலை 'போர்ப்ஸ் இந்தியா' நாளிதழ் வெளியிட்டுள்ளது.

அதில், டெல்லியில் 2.5 சதுர கிலோ மீட்டர் தொலைவுக்கு 1,826 சிசிடிவி கேமராக்களுடன் முதல் இடத்தையும், லண்டன் 1,138 சிசிடிவி கேமராக்களுடன் இரண்டாம் இடத்தையும், 610 கேமராக்களுடன் சென்னை மூன்றாம் இடத்தையும், 157 கேமராக்களுடன் மும்பை 18வது இடத்தையும் பிடித்துள்ளன.

அதன்படி,அதிகம் சிசிடிவி கேமராக்களை கொண்ட முதல் 20 நகரங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 3 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு தெற்கு ஆசிய இதழ் நடத்திய ஆய்வில், 657 கண்காணிப்புக் கேமராக்களுடன் முதல் இடத்தில் இருந்த சென்னை தற்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில், “ ஷாங்காய், நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களை பின்னுக்குத் தள்ளி அதிக சிசிடிவி கேமராக்களுடன் டெல்லி முதலிடத்தை பிடித்திருப்பது குறித்து பெருமை கொள்கிறேன்.இதற்காக டெல்லி அரசின் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வெள்ளி 27 ஆக 2021