மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 ஆக 2021

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு!

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர் பேரறிவாளன். பல்வேறு இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு கொரோனா பேரிடர் காலம் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் அவரின் தாய் அற்புதம்மாள், நீண்ட நாள் விடுப்பு வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து கடந்த மே மாதம் 28ஆம் தேதி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து திருப்பத்தூரில் உள்ள அவரது வீட்டில் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக தொற்று, போன்றவற்றிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

பேரறிவாளன் தொடர் சிகிச்சையில் இருப்பதால் அவருக்கு இரண்டு முறை பரோல் நீட்டித்து வழங்கப்பட்டது.

இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட பரோல் காலம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பரோல் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுத்தார்.

அதை ஏற்ற தமிழ்நாடு அரசு, மூன்றாவது முறையாக பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதுவரை என்னென்ன விதிமுறைகளை கடைப்பிடித்து வந்தாரோ அதையே பின்பற்ற வேண்டும் என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வெள்ளி 27 ஆக 2021