மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 ஆக 2021

காவல் நிலையங்களில் மனுதாரர்களுக்கு காத்திருப்பு அறை!

காவல் நிலையங்களில் மனுதாரர்களுக்கு காத்திருப்பு அறை!

மதுரை மாநகர் காவல் நிலையங்களுக்கு வரும் மனுதாரர்களுக்கு காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டதற்காக காவல் ஆணையருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களும், மனுதாரர்களும் காவல் நிலையத்தின் வெளியே காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதாவது, மதுரை மாநரின் அனைத்து காவல் நிலையங்களிலும் மனுதாரர்களுக்காக காத்திருப்பு அறை உருவாக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி காத்திருப்பு அறைகள் உருவாக்கப்பட்டு, மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு உதவுவதற்காக அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மனுதாரர்கள் அதிகாரிகளை சந்திக்கும்வரை, காத்திருப்பு அறையை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாகக் கட்டப்பட்டுள்ள காவல் நிலையங்களிலும் காத்திருப்பு அறை ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. பிற காவல் நிலையங்களில் மனுதாரர்கள் பயன்பெறும் வகையில் காவல் நிலையங்களுக்கு வெளியே தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் காத்திருப்பு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாநகர காவல் துறையின் இந்த ஏற்பாடு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 27 ஆக 2021