மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

31ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்யலாம்!

31ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்யலாம்!

மதுரை மாவட்ட விவசாயிகள் வருகிற 31ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் கூறியுள்ளார்.

மதுரை கிழக்கு மற்றும் மேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திருந்திய நெல் சாகுபடி எந்திர நடவு திடலினை பார்வையிட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், “மதுரை மாவட்டத்தில் குறுவை நெல் பயிர்களுக்கு இரு போக சாகுபடி 9, 704 ஹெக்டேர் பரப்பளவில் நெல் நடவாகி உள்ளது. அதேநேரத்தில் கடந்த ஆண்டு வெறும் 1,451 ஹெக்டேர் மட்டுமே நெற்பயிர் நடவு செய்யப்பட்டது. இந்த முறை ஜூன் முதல் வாரத்திலேயே பெரியாறு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட காரணத்தால் இது சாத்தியமாகி உள்ளது.

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின்பு இந்த ஆண்டுதான் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அரும்பனூர் பிட்-1, பிட்-2, சதுர்மடங்கன் மற்றும் உடுப்பங்குளத்தில் கடந்த ஆண்டு மிகவும் குறைந்த அளவில் குறுவை பருவத்தில் நடவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு 250 ஏக்கர் நெல் நடவாகி உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. திருந்திய நெல் சாகுபடி முறையினால் விளைச்சல் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அனைத்து விவசாயிகளும் மக்காச்சோளம், சோளம் மற்றும் கம்பு உள்ளிட்ட பயிர்களுக்கு வருகிற 31ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் அறிவிக்கப்பட்ட பயிர்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, பொது சேவை மையங்களில் ஏதாவது ஒன்றில் பயிர் காப்பீடு செய்யலாம்” என்று கூறினார்.

மேலும், “மதுரை மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 874.5 மில்லி மீட்டர் ஆகும். அதில் ஆகஸ்ட் வரை சராசரி மழை அளவு 395.3 மி.மீ ஆகும். ஆனால் இதுவரை 463 மி.மீ. மழை பெய்துள்ளது. சுமார் 18 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. அதனால் மதுரை மாவட்ட உணவு தானிய பரப்பு இலக்கான 95,900 ஹெக்டேர் மற்றும் உணவு உற்பத்தி இலக்கான 3 லட்சத்து 94,847 மெட்ரிக் டன்னை அடைந்து விடலாம்.

அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல்- 228 டன், சிறுதானியங்கள் - 12 டன், பயறு - 21 டன், எண்ணெய் வித்து - 5.35 டன், பருத்தி - 4 டன் மற்றும் விவசாயிகளுக்குத் தேவையான அளவு விதைகள் இருப்பில் உள்ளது. பல்வேறு அரசு மானியத்திட்டங்கள் 6,298 விவசாயிகளுக்கு ரூ.81 லட்சத்து 60,000 மானியம் வழங்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

ராஜ்

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

வியாழன் 26 ஆக 2021