மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

ஆன்லைன் மூலமாக அமெரிக்க கல்வி!

ஆன்லைன் மூலமாக அமெரிக்க கல்வி!

‘அமெரிக்காவில் கல்வி’ என்ற பெயரில் ஆன்லைன் வாயிலாக அமெரிக்க கல்வி கண்காட்சி வருகிற நாளை (ஆகஸ்ட் 27) மற்றும் செப்டம்பர் 3ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை அளிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பங்கேற்க இருக்கின்றன.

இதில் இந்திய மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் தங்கள் வீட்டில் இருந்தபடியே அமெரிக்க பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பல்கலைக்கழகச் சேர்க்கை வழிமுறைகள், பல்கலைக்கழக வளாக வாழ்க்கை, மாணவர்களுக்கான நிதி உதவிகள் மற்றும் கொரோனா தொற்று கால அமெரிக்க பல்கலைக்கழகப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எனப் பல்வேறு தகவல்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்தக் காட்சியில் பங்கேற்க பதிவு கட்டணம் எதுவும் இல்லை.

அமெரிக்காவில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு 27ஆம் தேதி (நாளை) மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் கண்காட்சி நடக்கிறது. இதில் பங்குபெற உள்ளவர்கள் https://bit.ly/EdUSAFair21EmbWeb என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

இதேபோல், பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு செப்டம்பர் 3ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள இருப்பவர்கள் https://bit.ly/UGEdUSAFair21EmbWeb என்ற இணையதளம் மூலமும் பதிவு செய்யலாம்.

இதுகுறித்து பேசியுள்ள சென்னை அமெரிக்க துணைத்தூதர் ஜூடித் ரேவின், “கடுமையான உழைப்பு, திறமை மற்றும் வகுப்பறைகளில் அவர்களின் கலாசார மற்றும் அறிவுப்பூர்வமான பங்களிப்பு காரணமாக இந்திய மாணவர்களை அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பெரிதும் மதிக்கின்றன. இந்திய மாணவர்களும், பெற்றோரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு கண்காட்சியில் பங்கேற்று பயன் அடைய அழைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்

மேற்கண்ட தகவல் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 26 ஆக 2021